வைகோவை நெகிழ செய்த தர்மதுரை..!


சமீபத்தில் வெளியான படங்களில் திரையுலகம், ரசிகர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களிடமும் பாராட்டு பெற்ற படம் என்றால் அது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான தர்மதுரை படம் தான்.. லேட்டாக பார்த்தாலும் லேட்டஸ்டாக இந்தப்படத்தை பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தப்படத்தின் நுனி முதல் அடிவரை பாராட்டி தள்ளி இருக்கிறார்.

மொத்தத்தில் இந்தப்படத்தை பற்றி முத்தாய்ப்பாக அவர் சொல்வதாவது, “இந்தப்படத்தை இயக்கிய சீனுராமசாமிக்கு எவ்வளவு உயர்ந்த விருது கொடுத்தாலும் தகும். இதோ, தெற்குச் சீமையில் இருந்து, ஆம், இராஜபாளையத்தில் இருந்து ஒரு உன்னதமான நடிகன் வெள்ளித்திரையில் ஆளுமை செய்கிறான். அவர்தான் சகோதரன் விஜய்சேதுபதி ஆவார். இவரது, பன்முகத்திறமை, பல வெற்றிகளை குவிக்கும். சீனு ராமசாமிக்கு உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அந்த விருதுக்குத்தான் பெருமை” என மனதார பாராட்டியுள்ளார் வைகோ.

Leave a Response