கலைப்புலி தாணு தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு முட்டாள்தனமான முடிவால், எந்த சேனலும் படங்களின் டிவி ரைட்ஸ் வாங்க கடந்த சில வருடங்களாக முன் வரவில்லை.. அப்படிய் வாங்கினாலும் பெரிய ஸ்டார்களின் படங்களை மட்டுமே வாங்கி ஒளிபரப்பி வந்தன. இந்தநிலை இப்போது அவ்வளவு தீவிரமாக இல்லையென்றாலும், தற்போது வரை ஸ்டார் வேல்யூ உள்ள படங்களை வாங்குவதில் மட்டுமே டிவி சேனல்கள் ஆர்வம் காட்டி வருகின்றன..
அந்தவகையில் தற்போது ஜீ டிவி தமிழ் சேனல் ஒட்டுமொத்தமாக 16 படங்களின் உரிமையை கைப்பற்றி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தப்படங்களுக்கு சுமார் 5 கோடியிலிருந்து 15 கோடி ரூபாய் வரை விலையாக கொடுத்துள்ளதாம் இந்நிறுவனம்..
விரைவில் வெளியாக இருக்கும் மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’, சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’, புரியாத புதிர், இடம் பொருள் ஏவல் மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற இவன் தந்திரன், வனமகன், எமன், கவண், டோரா, மரகத நாணயம் உள்ளிட்ட 16 படங்களின் உரிமையை கைப்பற்றி இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.