செந்தில்பாலாஜியை கைது செய்ய தீவிரம் – நடக்குமா?

ஊத்​தங்​கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளை​ய​ராஜா​விடம் குதிரைபேரம் நடத்​தி​ய​தாக திரு​வல்​லிக்​கேணி காவல்துறையினர் பதிவு செய்​துள்ள வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில்​பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​குமார் மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கில் இரு​வருக்​கும் உயர்நீதி​மன்​றம் நிபந்​தனை முன்​பிணை வழங்கி உத்​தர​விட்​டுள்​ளது.இந்​நிலை​யில் இந்த வழக்​கில் விசா​ரணை என்ற பெயரில் தங்​களை வரவழைத்து துன்​புறுத்​தக்​கூ​டாது என காவல்துறையினருக்கு உத்​தர​விடக்​கோரி செந்​தில்பாலாஜி​யும்,அசோக்​கு​மாரும் மீண்​டும் உயர்நீதி​மன்​றத்​தில் மனுக்​களைத் தாக்​கல்
செய்​திருந்​தனர்.

அதில்,அமைச்​சர் ஆதவ்அர்​ஜூனா சமீபத்​தில் கரூர் சம்​பவம் தொடர்​பாக தீர்க்​கப்பட வேண்​டிய கணக்கு ஒன்று
உள்​ளது என வெளிப்​படை​யாக மிரட்​டல் விடுக்​கும் வகை​யில் பேசி​யுள்​ளார்.அதன்​படி ஏதேனும் ஒரு வழக்​கில்
எங்​களைக் கைதுசெய்ய காவல்துறையினருக்கு அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.ஊத்தங்​கரை தவெக சமஉவிடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாக பதி​யப்​பட்​டுள்ள வழக்​கில் எங்​களை காவலில் வைத்து விசா​ரிக்க வேண்​டிய அவசி​யமில்லை எனக்​கூறி உயர்நீதி​மன்​றம் முன்​ஜாமீன் வழங்​கி​யுள்ள நிலை​யில்,தொடர்ந்து காவல்துறையினர் சோதனை நடத்தி வரு​கின்​றனர்.சட்​டப்​படி​யான எந்த புலன்விசா​ரணை​யை​யும் நாங்​கள் தடுக்​க​வில்​லை.காவல்​துறை​யில் நிலு​வை​யில் உள்ள வழக்​கின் விசா​ரணைக்கு நாங்​கள் தேவைப்​படு​வ​தாக இருந்​தால் சட்​டப்​படி முறை​யாக நோட்​டீஸ் அனுப்ப காவல்துறையினருக்கு உத்​தர​விடவேண்​டும்.குறிப்​பாக,விசா​ரணை மற்​றும் சோதனை என்ற பெயரில் எங்​களை துன்​புறுத்​தக்​கூ​டாது என காவல்துறையினருக்கு உத்​தர​விடவேண்​டும் எனக் கோரப்​பட்​டிருந்​தது.

இந்தமனுக்​கள் மீதான விசா​ரணை நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நேற்று நடந்​தது.அப்​போது மாநிலஅரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான்சத்​யன் ஆஜராகி,மனு​தா​ரர்​கள் தங்​களை காவல்துறையினர் துன்​புறுத்​தக்கூ​டாது என பொத்​தாம் பொது​வான உத்​தர​வைக் கோரு​கின்​றனர்.இந்த விவ​காரத்​தில் காவல்​துறை மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களைக் கூறி​யுள்​ளனர்.எனவே இதுதொடர்​பாக விரி​வாக பதிலளிக்க அவகாசம் வழங்கவேண்​டும் எனக் கோரி​னார்.

செந்​தில்​பாலாஜி,அசோக்​கு​மார் தரப்​பில் ஆஜரான மூத்தவழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்கோ,குதிரைபேர வழக்கில் முன்பிணை பெற்​று உள்ள மனு​தா​ரர்​களை வேறு வழக்​கில் காவல்துறையினர் கைது செய்​யக்​கூடும் என்ற அச்​சம் உள்​ளது.இந்தவழக்​கின் விசா​ரணை​யில் மனு​தா​ரர்​கள் தலை​யீடு செய்​ய​வில்​லை.மாறாக விசா​ரணை என அழைத்து துன்​புறுத்​தக்​கூ​டாது எனக் கோரு​கிறோம் என்​றார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்​திரையன்,தவெக சமஉவிடம் குதிரைபேரம் நடத்​தி​ய​தாகப்
பதி​யப்​பட்ட வழக்​கில் மனு​தா​ரர்​களுக்கு முன்​பினை வழங்​கப்​பட்​டும்,இன்​னும் அவர்​கள் விசா​ரணை நீதி​மன்​றத்​தில் சரணடைந்து பிணை பெற​வில்​லை.இந்தச்சூழலில் தங்​களை துன்​புறுத்​தக்​கூ​டாது எனக்​கோர முடி​யாது.மற்ற
வழக்​கு​களைப் பொருத்​தமட்​டில் முன்​கூட்​டியே இந்தமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தால் மனு​தா​ரர்
கோரி​யுள்​ளபடி எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்கமுடி​யாது எனக்​கூறி மனுக்​களை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்டுள்​ளார்​.
இதையடுத்து,எப்படியாவது செந்தில்பாலாஜியைக் கைது செய்யவேண்டும் என்று காவல்துறை தீவிரம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response