
ஜாக்சன் துரை படத்தை தொடர்ந்து சிபிராஜ் நடித்துவரும் படம் தான் ‘கட்டப்பாவ காணோம்’. மணி செய்யோன் இயக்கும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசுவாமி.
வாஸ்து மீன் ஒன்று தொலைந்து போவதால் வரும் பிரச்சினைகளை மையப்படுத்தியே இப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மணி செய்யோன். இப்படத்தில் வரும் வாஸ்து மீன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி. முன்னணி நடிகர் ஒருவர், பிரதான கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியிருப்பதால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


