இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் அடுத்த சோகம் – நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் -(முரளி) மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்.

இதுகுரித்து வெளியான செய்திக்குறிப்பு….

தமிழ்த் திரைப்பட நடிகர் கார்த்திக் சபேஷ் (37) அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற துயரச் செய்தியை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அவர் அறியப்பட்டவர்.

அவரைப் பிரிந்து வாடும் அவரது அன்பு மனைவி திருமதி ரம்யா கார்த்திக் மற்றும் அவர்களது இரு மகள்கள் பிரிஷானிதாரா, ஹைரானிதாரா ஆகியோருக்கும், அவரது மூத்த சகோதரிகள் கீதா சபேஷ் மற்றும் அர்ச்சனா சபேஷ் ஆகியோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறுதிச்சடங்கு விவரங்கள்:
நேரம்: இன்று மாலை 4:30 மணி
இடம்: வளசரவாக்கம் மயானம், சென்னை
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இத்துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு இழப்பைத் தாங்கும் மனவலிமையையும் ஆறுதலையும் இறைவன் வழங்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி தேவா சகோதரர் சபேஷ் காலமானார். கடந்த 17 ஆம் தேதி தேவா காலமானார். இந்நிலையில் அவர் சகோதரர் மகனும் நடிகருமான கார்த்திக் காலமானார்.

இவர் உடல்நலக்குறைவு காரணமாக பலநாட்களாக சிகிச்சையில் இருந்துள்ளார்.சிகிச்சை பலனின்றி காலமானதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response