அருண் விஜய் படத்துக்கு விமோசனம் ; ஆகஸ்ட்-25ல் ‘வா டீல்’..!


ரத்தின சிவா இயக்கத்தில் அருண்விஜய், கார்த்திகா, சதீஷ், வம்சி கிருஷ்ணா, நடன இயக்குநர் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘வா டீல்’. இப்படம் தயாராகி சில வருடங்களாகவே கிடப்பில் இருக்கிறது. இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு உள்ளிட்ட அனைத்தையும் முடித்து பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது பட வெளியீடு முடிவு செய்யப்பட்டு இறுதியில் தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இந்தப்படம் ஆகஸ்ட் மாத வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வந்தார்கள். அதன்படி படமும் தணிக்கை செய்யப்பட்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 25-ம் தேதி ‘வா டீல்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. சில வருட போராட்டங்களுக்கு பிறகு படம் வெளியாவதால் படக்குழுவினர் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Leave a Response