சட்டக்கல்லூரியில் பாடம் படிக்கிறார் விமல்..!


விமல் நடித்த சமீபகால படங்கள் எதுவும் அவருக்கு ஏற்றம் தருவதாக இல்லை. அதனால் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விமல். கிராமத்து நாயகனாக அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்ததால் அவரைத்தேடி கிராமத்து கதைகளே செல்கின்றன. ஆனால், விமலுக்கு தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளில் நடிப்பதில் உடன்பாடில்லையாம்.

அதனால் தன் மீது கிராமத்து நாயகன் என்கிற முத்திரை அழுத்தமாக பதிந்து விடக்கூடாது என்பதற்காக நகரத்து கதைகளில் நடிப்பதற்காக கதை கேட்டு வந்தவர், தற்போது தேவதையை கண்டேன், மலைக்கோட்டை, பட்டத்து யானை உள்பட பல படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவராக நடித்து வருகிறார் விமல். அந்த வகையில், கல்லூரி பெண்களை கலாய்ப்பது மட்டுமின்றி, மாணவர்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் தில்லான மாணவனாகவும் நடிக்கிறாராம் விமல். அதனால் இந்த படம் விமலின் கேரியரில் வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.

Leave a Response