தேர்தல் அரசியலுக்கும் ஜோக்கர் படத்துக்கும் சம்பந்தமில்லை..!

 

குக்கூ படத்தை இயக்கிய ராஜூ முருகனின் அடுத்த படமாக உருவாகியுள்ளது ‘ஜோக்கர்’. குக்கூ படத்தில் பார்வையற்ற இரண்டு இளம் உள்ளங்களின் காதலை சொல்லி நெகிழ வைத்த ராஜூ முருகன் இந்தப்படத்தில் எளிய மனிதர்களின் அரசியலை பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறாராம். ‘ஆரண்ய காண்டம்’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த சோமசுந்தரம் என்பவர் இந்தப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.

இந்தப்படத்தில் ‘என்னடா உங்க சட்டம்’ என்கிற பாடல் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.. இதனால் இது அரசியல் சம்பந்தமான படம் என்றும் தேர்தலுக்கு முன்பே வெளியிடப்பட்டு மக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் அப்போது ரிலீசாகாமல் வரும் ஆகஸ்ட்-12ல் தான் வெளியாகிறது.. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

“இது தேர்தல் அரசியலை சொல்லும் படமல்ல.. அன்றாட வாழ்வில் நம்மை ஆட்டிவைக்கும் அரசியல் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன்.. பட வேலைகள் சமீபத்தில் தான் முடிந்தது.. இந்தப்படம் தேர்தல் சமயத்தில் வெளியாவதை விட சுதந்திர தின நேரத்தில் வெளியாவது தான் சரியாக இருக்கும் என்பதால் இப்போது ரிலீஸ் செய்கிறோம்” என நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்து பேசினார் இயக்குனர் ராஜூ முருகன்.

 

 

Leave a Response