அடப்பாவமே.. இது சூர்யா நடிக்கவேண்டிய படமா..?


நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிதது வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நடிகர் சூர்யா, இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ‘ஜோக்கர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது. படத்திற்கு ‘ஜிப்சி’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் ஹீரோவாக நடிகர் ஜீவா நடிக்கிறார். ஆனால் இந்தப் படத்தின் முதல் வாய்ப்பு நடிகர் சூர்யாவுக்குத்தான் சென்றது. ராஜு முருகன், சூர்யாவிடம் கதை சொல்லி சூர்யாவும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். ஆனால் சூர்யாவின் தேதிகள் ஒத்து வராததால் இப்படம் ஜீவாவுக்கு கைமாறியுள்ளதாம்.

Leave a Response