பாலாவுடன் கைகோர்க்கும் குக்கூ’ இயக்குனர்..!


தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தைத் இயக்குனர் பாலா தமிழில் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகிறார். படத்திற்கு ‘வர்மா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட வேறெந்த தகவலுமே இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜுமுருகன் வசனம் எழுதி வருகிறார்.

Leave a Response