இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அடுத்ததாக ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஸ்ரீகாந்தை வைத்து ‘நம்பியார்’ என்ற படத்தை இயக்கிய கணேஷா என்ற இயக்குநர் இப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் விஜய் ஆண்டனி முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளார். சிங்கம் பட சூர்யாவைப் போல் மீசை வைத்துக் கொண்டு மாஸாக உள்ளார். இதனால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே ஆரம்பித்துவிட்டது.