கமலின் அரசியல் அஸ்தமனம் தொடங்கியது

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி அண்மைக்காலமாகக் கலகலத்துப் போயிருக்கிறது. அக்கட்சியின் மீது கொஞ்ச நஞ்ச நம்பிக்கை வைத்திருந்தோரும் மனசுவிட்டுவிட்டனர்.

ஏனெனில் கமல் ஓர் அரசியல்கட்சித் தலைவர் என்பதை விட நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் வேலைகளுக்கே முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்துவருகிறார்.

அரசியல் கருத்துகளை அவ்வப்போது சமூகவலைதளங்களில் மட்டும் வெளியிட்டு வருகிறார். இதனால் அவருடைய கட்சி முழுமையாகச் செயலிழந்து இருக்கிறது.

இந்நிலையில், கமல் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார் கமல். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.

இது அரசியல் ரீதியாகக் கமலின் அஸ்தமனத்தின் தொடக்கம் என்கிறார்கள்.

ஊழல்வாதிகள் என்று அவ்வப்போது விமர்சனம் செய்யும் திமுக தலைவரின் மகனிடம் தன் படத்தைக் கொடுத்து வியாபார ஒப்பந்தம் செய்து கொள்வது சரியா? என்கிற கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன.இதன்மூலம் தனக்குப் பொருளியல் இலாபம் வருமென்றால் எதைச் செய்யவும் கமல் தயாராக இருப்பார் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்றும் விமர்சனங்கள் வருகின்றன.

மேலும் அக்கட்சியில் ஏராளமானோர் வெளியேறிய பின்பும் திமுகவைப் பிடிக்காதவர்கள், அதிமுகவுக்குப் போகமுடியாதவர்கள்தாம் இப்போது அக்கட்சியில் இருப்பதாகவும் அவர்கள் எல்லாம் இந்த வியாபார ஒப்பந்தத்தால் கடைசிநம்பிக்கையையும் இழந்துவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response