‘அருவி’ படத்தின் தயாரிப்பாளர் நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று..!


ஜோக்கர் படத்தை தயாரித்து ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம், அதேபோல சமூக சிந்தனையுடன் கொடிய ‘அருவி என்கிற படத்தையும் தயாரித்துள்ளது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன், ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் டிசம்பர் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சென்சார் கெடுபிடிகளில் இருந்து இந்தப்படம் எளிதாக தப்பியது குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

“தணிக்கை குழுவினர் இப்படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். அவர்கள் இப்படத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம் ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது” என கூறியுள்ளார்

Leave a Response