அருவி இயக்குநரின் அடுத்த படம் தொடக்கம்

ரெமோ, வேலைக்காரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’, மற்றும் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

இந்நிறுவனம் அடுத்து ‘அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்திலும் ‘அருவி’ படத்தில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரேமண்ட் படத்தொகுப்பாளராக பணிபுரியவிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘மேயாத மான்’ படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்கவிழா குமுளி அருகில் உள்ள நோஸ்ரம் மையத்தில் மே 29 அன்று நடந்துள்ளது.

இந்த விழாவில் 24 ஏம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் ரேமண்ட்,பேராசிரியர் ராஜநாயகம், பாவலர் அறிவுமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தில் நடிக்கப்போவது யார்? எப்போது படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்கின்றனர்,

Leave a Response