
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் (FeTNA)2016 ஆம் ஆண்டு தமிழ் விழா, நியூஜெர்ஸி மாநிலம் ட்ரென்டன் நகரில். ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.
தனித் தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டமாக இந்த ஆண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்விழாவில் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலொன்று அறிமுகம் செய்யப்பட்டது. தூய தமிழராய் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லங்களில் நடக்கும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பாட ஒரு தமிழ்ப்பாடல் இல்லையே என்கிற குறை இருந்துகொண்டேயிருந்தது. அக்குறையைப் போக்கும் வண்ணம் பாவலர் அறிவுமதி, தமிழில் ஒரு பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இயற்றியிருக்கிறார்.
அரோல்கரோலி இசையில் உத்ரா பாடியுள்ள அந்தப்பாடல் தமிழ்விழாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப்பாடல் உருவாக்கக் காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்த்தம்பி ஒளிப்பதிவில் சந்தீப்பின் படத்தொகுப்பில் எழில்பாரதியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள அந்தக் காணொளி இணையத்தில் வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
இந்த இணைப்பில் அந்தக் காணொளியைக் காணலாம்.
தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை உருவாக்கியதன் மூலம் தமிழ்ச் சமுதாய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாவலர் அறிவுமதிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.



வாழ்த்துக்கள்