
தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தாராபுரம் குண்டடம், மானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பரப்புரை செய்தார்.அப்போது அவர் பேசியதாவது….
திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன்தான் விஜய் இன்று ஆட்சி நடத்துகிறார். தவெக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும் என கதை கட்டினார்.என்ன நடந்திருக்கிறது? விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது.எதைப்பற்றியும் அவருக்குக் கவலையில்லை.தினமும் கோட்-சூட் போட்டு வருகிறார்.போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள்.மாலையில் ஓடிவிடுகிறார்.சனி,ஞாயிறு விடுமுறை.யாரும் பார்க்க முடியாது.இப்படிப்பட்ட முதல்வரை தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்க்கமுடியும்.தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது.
அரசியலில் எங்களை வீழ்த்தவேண்டும் என்று எண்ணினால் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.அதிமுக ஆட்சியில் பல இடைத்தேர்தல் வந்தது.எதிலும் எதிர்க்கட்சி மீது பொய்வழக்கு போடவில்லை.திமுக ஆட்சியிலும் இப்படி கைது நடவடிக்கை எடுக்கவில்லை.ஜனநாயக முறைப்படி வாக்கு கேட்கும் நிலைதான் இருந்தது.ஆனால், தோல்வி பயத்தில் தேர்தல்பணி செய்யவிடாமல் கைது செய்வது கண்டனத்துக்குரியது.காவல்துறையினரே நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்.
இந்த ஆட்சி நிலைக்காது.எது செய்தாலும் பாதிக்கப்படப்போவது ஆட்சியாளர்கள் அல்ல,நீங்கள்தான்.நீங்கள் முடக்க நினைத்தால் முடக்க,முடக்க எகிறி மேலே வருவோம்.நான், 7 முறை மக்களுக்காக சிறை சென்றிருக்கிறேன். உங்க தலைவர் அப்படியா? வழக்கு போட்டுவிட்டால் பயந்துவிடுவோமா? ஆட்சி மாறும்போது காட்சி மாறும்.இப்போது எச்சரிக்கிறேன்.உங்கள் தலைவர் இங்கு வருவார்,அப்போது நானே களத்தில் இறங்கி போராட்டத்தை நடத்துவேன்.மிரட்டிப் பார்க்கிறீர்களா? நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும்.கரூர் துயரம் நடந்து ஓராண்டு ஆனது.இறப்புக்கு பதில் சொல்லவில்லை.சிபிஐ விசாரணை நடக்கிறது.நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்போது தவெக இருக்குமா? இருக்காதா? என்பது அப்போது தெரியும்.
காலத்துக்கு ஏற்றவாறு நடிப்பவர் விஜய்.எல்லாக் கூட்டங்களிலும் வீரவசனம் பேசுகிறார்.உங்கள் வீட்டில் ஒருவராக இருப்பேன் என்கிறார்.எவ்வளவு பச்சைப்பொய்.பாசம் என்றால் தாய்,தந்தை,கட்டிய மனைவி,பிள்ளையுடன் வாழவேண்டும்.அந்தத் தகுதி இருக்கிறதா? குடும்பம் பற்றிப் பேச அவருக்கு தகுதி இருக்கிறதா?.வசனம் பேசினால் போதாது.நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டவேண்டும்.நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நான் பேசுவது உண்மைதானே,தவறாக எண்ணிவிடக்கூடாது.பாசம்,குடும்பம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் அதிமுகவினரை நேரில் பார்த்து தவெகவுக்கு கூவிக்கூவி அழைக்கிறார்.இன்னொருவர் வருவாய்த்துறை அமைச்சர்,அதிமுகவினர் இல்லங்களுக்கு சென்று பிச்சை எடுப்பது போல,இரவுநேரத்தில் கூவிக்கூவி அழைக்கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா தவெகவுக்கு போய் 2 வருடம்தான் ஆகுது.அங்கு போய் அதிமுகவை விமர்சிக்கிறார்.அதிமுகவை கரைத்துவிடுவாராம்.இது என்ன சர்க்கரையா? கரைவதற்கு? இது இரும்புடா தம்பி…இரும்பு.ஒருத்தனும் அசைக்க முடியாது.எடப்பாடியில் விஜய் பிரசாரம் செய்திருந்தால்,நான் தோற்றுப்போயிருப்பேன் என்கிறார்.ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை.எடப்பாடி எப்படிப்பட்ட தொகுதி தெரியுமா? 2024 இல் கூட்டணி இல்லாதபோதே 45 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற தொகுதி.உங்கள் தலைவர் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவரா? என்ன சாதனை செய்தார்..? 70 படம் நடித்திருக்கிறார்,அப்போதுகூட தேசியவிருது வாங்க முடியவில்லை
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


