சச்சினை முந்திய கோலி – நேற்று நிகழ்த்திய புதியசாதனை

இந்திய மட்டைப்பந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடியது.

அதில் இந்திய முன்னணி வீரர் விராட் கோலி தனது 303 ஆவது ஆட்டத்தில் 15,000 ஓட்டங்கள் என்ற சாதனை மைல்கல்லை எட்டினார்.

இதற்குமுன் முன்னாள் இந்தியவீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 377 ஆவது ஆட்டத்தில் 15,000 ஓட்டங்களை எட்டியதே அதிவேக சாதனையாக இருந்தது.

தற்போது சச்சினை விட 74 ஆட்டங்கள் குறைவாக எடுத்துக்கொண்டு,அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலகசாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.

போட்டியில் 14,941 ஓட்டங்களுடன் களம் புகுந்த கோலி,15,000 ஓட்டங்களை எட்ட 59 ஓட்டங்கள் தேவைப்பட்டன. நிதானமாக விளையாடிய அவர்,46 பந்துகளில் 59 ஓட்டங்களை எட்டி இந்த மைல்கல்லை அடைந்தார்.

இச்சாதனையைப் பூர்த்தி செய்தவுடன்,தனது முன்மாதிரியான சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருகரங்களையும் உயர்த்தி,திருவனந்தபுரம் மைதானத்தில் திரண்டிருந்த இரசிகர்களின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டார்.

போட்டியின் இறுதியில் அபாரமாக ஆடிய கோலி 88 பந்துகளில் 139 ஓட்டங்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அணித்தலைவர் சுப்மன் கில்லின் அதிரடி சதம் (110 ஓட்டங்கள்) மற்றும் கோலியின் 55 ஆவது ஒருநாள் சதத்தின் உதவியால்,மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்த 296 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்தியா மிகஎளிதாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

18,426 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில்,அவருக்கு அடுத்தபடியாக 15,000 ஓட்டங்களைக் கடந்த ஒரேவீரராக விராட் கோலி திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response