
அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தனித் தனியாகச் செயல்பட்டு வருகிறார்கள்.டிடிவி.தினகரன் தனியாகக் கட்சி நடத்தி வருகிறார்.
இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆளும் பாஜக ஈடுபட்டிருக்கிறது.ஆனால், ஓ.பன்னீர்செல்வம், நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று அதிமுகவுக்கு உரிம்னை கொண்டாடி பல வழக்குகள் நடத்திவருகிறார்.
அந்த வழக்குகளை அவர் திரும்பப் பெற்றால்தான் அவரை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவருகிறாராம்.
அதனால் அந்த ஒருங்கிணைப்பு நடக்காமல் இருக்கிறது.விரைவில் அது நடதுவிடும் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் அருகே நால் ரோட்டில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க நேற்று காலை ஓபிஎஸ் சென்றார். அன்னூரில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அவர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இரட்டை இலையை மீட்கும் வரை சட்டபூர்வமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம், போராடுவோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும். உண்மை தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்றார்.
அவர் இவ்வாறு கூறியிருப்பதால் இதுவரை ஒருங்கிணைப்பு முயற்சிகள் கைகூடவில்லை என்பதும் அதன் வெளிப்பாடுதான் இந்தக் கருத்தைச் சொல்லக் காரணம் என்று தெரிகிறது.
இதனால் அதிமுக தொண்டர்கள் கடும் சோர்வில் இருக்கிறார்கள்.


