தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் கே.பி.இராமலிங்கம்?

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் நடக்கும் உட்கட்சிச் சண்டையால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

அக்கட்சியின் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் குறித்த ஆபாச காணொலியை அக்கட்சியைச் சேர்ந்த மதன்ரவிச்சந்திரன் என்பவரே வெளியிட்டார்.

அதன்விளைவாக, கட்சிப் பதவியிலிருந்து கே.டி.ராகவன் விலகினார். அக்காணொலியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடுதான் அக்காணொலி வெளியிடப்பட்டதென்றும் அதற்கு ஒலிப்பதிவு சான்றையும் வெளியிட்டார் மதன் ரவிச்சந்திரன்.

இவை மட்டுமின்றி, இன்னும் பலர் பற்றிய பாலியல் இரகசியங்கள் தம்மிடம் உள்ளன என்று மதன்ரவிச்சந்திரன் கூறியிருப்பதால் தமிழ்நாடு பாஜகவினர் மத்தியில் பெரும்பதட்டம் நிலவுகிறது.

இந்நிலையில், இவ்வளவுக்கும் காரணமான அண்ணாமலையைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க தில்லித்தலைமை முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்த தலைவர் யார்? எனும் தேடல் தற்போது நடப்பதாகவும் அதில், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கும் கே.பி.இராமலிங்கம் பெயர் முன்னிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response