
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருந்தாலும் இருகட்சியினருக்குமான உறவு சுமுகமாக இல்லை.
இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு,
1.மயிலாப்பூர்,2தளி.3.மொடக்குறிச்சி,4.உதகமண்டலம்,5.அவினாசி (தனி),6.திருப்பூர் தெற்கு,7.கோவை வடக்கு
8.கந்தர்வக்கோட்டை (தனி),9.புதுக்கோட்டை,10.திருப்பத்தூர்,11.மதுரை தெற்கு,12.சாத்தூர்,13.திருச்செந்தூர்,14.வாசுதேவநல்லூர் (தனி),15.ராதாபுரம்,16.நாகர்கோவில்,17.விளவங்கோடு
18.ஆவடி,19.திருவண்ணாமலை,20.தஞ்சாவூர்,21.திருவாரூர்,22.அறந்தாங்கி,23.மானாமதுரை (தனி),24.இராமநாதபுரம்,25.குளச்சல்,26.பத்மநாபபுரம்,27.இராசிபுரம் (தனி) ஆகிய 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகுதி ஒதுக்கீடு குறித்து பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பி.எல்.சந்தோசுக்கு, புகார் கடிதம் ஒன்றை மின்னஞ்சல் மூலம் முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்து உள்ளார்.
அதில்….
பாஜகவுக்கும், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமில்லாத தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. குறிப்பாக பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொண்டர்களுக்கு திருப்தி இல்லை.அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 7 தொகுதிகளில் கூட வெற்றி பெறுவது சந்தேகம். அதிமுக போட்டியிட்டு தோல்வியுற்ற தொகுதிகளை பாஜக தலையில் கட்டிவிட்டது. குறிப்பாக திமுக, காங்கிரசு வலுவாக உள்ள தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக திட்டமிட்டே ஒதுக்கி உள்ளது. திமுகவின் கோட்டையாக உள்ள திருவண்ணாமலை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள், கட்சி வளர்ந்து வரும் அல்லது வளரக்கூடிய தொகுதிகள் அல்ல.
இது ஆளும் திமுகவுக்கே சாதகமாக அமையும்.பாஜக வலுவாக உள்ள கோவையில் 1 தொகுதியும், திருப்பூரில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது கட்சி வளர்ச்சியைப் பாதிக்கும்.எனக்குப் போட்டியிட விருப்பமில்லை. எனக்காக எந்தத் தொகுதியையும் ஒதுக்கவேண்டாம்.பாமக,அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பின்னரே,பாஜகவுக்கான தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டு கூட்டணியில் கடும் குழப்பத்தையும் கட்சியினரிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


