ஆம் ஆத்மி கட்சியை உடைத்தது பாஜக – தில்லி பரபரப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்​மி கட்​சிக்கு மாநிலங்​களவை​யில் 10 உறுப்பினர்​கள் உள்ளனர்.
கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வ​ரான ராகவ் சத்தா, அக்​கட்​சி​யின் மாநிலங்​களவை துணைத்தலை​வ​ராக இருந்து
வந்​தார்.சமீபத்​தில் அந்தப் பொறுப்​பில் இருந்து அவர் நீக்​கப்​பட்​டு,அவருக்கு பதிலாக அசோக் மிட்​டல்
நியமிக்​கப்​பட்​டார்.

இந்தச்சூழலில்,கடந்த சில வாரங்​களாகவே,கட்​சித் தலை​மைக்​கும் ராகவ் சத்தாவுக்​கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்​தது.இந்நிலை​யில்,அவர் அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைவ​தாக நேற்று அறி​வித்​தார். அவருடன்,அக்​கட்​சியின் மேலும் 6 மாநிலங்​களவை உறுப்பினர்களும் பாஜக​வில் இணைவதாக அறி​வித்​துள்​ளனர்.

டெல்லியில் செய்​தி​யாளர்​களிடம் ராகவ் சத்தா நேற்று கூறிய​தாவது….

ஆம் ஆத்மி கட்​சி​யின் மாநிலங்​களவை உறுப்பினர்​களில் மூன்​றில் 2 பங்​கினர் பாஜக​வில் இணைய முடிவு
செய்​துள்​ளோம்.என்​னுடன் சேர்ந்து ஸ்வாதி மாலி​வால், ஹர்​பஜன் சிங், சந்​தீப் பதக், அசோக் மிட்​டல், ராஜேந்​தர் குப்​தா, விக்​ரம் சாஹ்னி என மொத்​தம் 7 உறுப்பினர்கள் ஆம் ஆத்மியில் இருந்து வெளி​யேறி உள்​ளோம்.

எனது வாழ்​வின் 15 ஆண்​டு​களை ஆம் ஆத்மி கட்​சி​யின் வளர்ச்​சிக்​காக அர்ப்​பணித்​தேன். ஆனால், நேர்​மை​யான அரசி​யலை முன்​னிறுத்தித் தொடங்​கப்​பட்ட இந்த இயக்​கம், தற்​போது அந்தப் பாதை​யில் இருந்து வில​கி​விட்​டது. நியாய​மான மனித​னாகிய நான் தவறான, நேர்மை இல்​லாத ஒரு கட்​சி​யில் இருந்​ததை இப்​போது உணர்​கிறேன். எனவே, ஆம் ஆத்மி கட்​சி​யில் இருந்து விலகி மக்​களுக்​காகப் பணி​யாற்ற முடி​வெடுத்​துள்​ளேன்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

7 பேரும் கையெழுத்​திட்ட கடிதத்தை மாநிலங்​கள​வைத் தலை​வர் சி.பி.​இரா​தாகிருஷ்ணனிடம் அவர்
சமர்ப்​பித்​துள்​ளார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன், இனிப்பு வழங்கி வரவேற்றார்.

மாநிலங்​களவை​யில் ஆம் ஆத்மி கட்​சிக்கு மொத்​தம் 10 உறுப்பினர்​கள் உள்ளனர். இந்த நிலை​யில், அங்​கிருந்து 7 பேர் விலகி பாஜக​வில் இணைவது, ஆம் ஆத்மிக்குப் பெரும் பின்​னடை​வாகக் கருதப்​படு​கிறது.

கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​படி, ஒரு கட்​சி​யின் மூன்​றில் 2 பங்கு உறுப்​பினர்​கள் வில​கி, வேறொரு கட்​சி​யில் இணைந்​தால் மட்​டுமே அவர்​களின் பதவி பறி​போ​காது. இந்த நிலை​யில், தற்​போது மூன்​றில் 2 பங்கு
உறுப்​பினர்​கள் ஒரே நேரத்​தில் வில​கி​யுள்​ள​தால், அவர்​கள் மீது கட்​சித் தாவல் தடைச்சட்​டம் பாயாது.

இதற்கிடையே, ராகவ் சத்தா, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய 3 பேரையும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக அக்கட்சியின் மற்றொரு மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா,தேசியவாத காங்கிரசு ஆகிய கட்சிகளை இரண்டாக உடைத்தது பாஜக.சிவசேனா கட்சியில் இருந்து மூத்ததலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களை வெளிவரச்செய்து அவரை முதலமைச்சர் ஆக்கியது. இதனால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை இழந்தார்.

அதேபோல் சரத்பவார் தலைமையில் செயல்பட்ட தேசியவாத காங்கிரசுக் கட்சியை சமீபத்தில் விமான விபத்தில் மறைந்த அவரது உறவினர் அஜித்பவாரை வைத்து உடைத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது.

அந்தவழியில் தற்போது டெல்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியையும் பா.ஜ.க உடைத்துள்ளது. அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவால் பா.ஜ.க வுடன் இணக்கமாகச் செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் ஆம்ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவையும் வளைத்துப்போட்டு அவர் மூலம் ஆம்ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்துள்ளது பாஜக என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்நிகழ்வு தில்லி மற்றும் பஞ்சாப் அரசியலரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response