தூத்துக்குடி – அதிமுக மற்றும் சரத்குமார் கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று (ஜூன் 25,2021) மாலை,

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும் – மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளருமான வி.பி.செல்வக்குமார், பி.ஏ., பி.எல்., தலைமையில்

டேவிட் செல்வின் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்),

கோவில்பட்டி நகர முன்னாள் செயலாளர் எஸ்.சங்கரபாண்டியன்

மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் மைக்கேல் எஸ்.ராஜேஷ்

ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது திமுகழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Response