ஈரோடு மாவட்ட 18 அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் – விவரம்

தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,ஜூன் 25 மாலையில்,

1.ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநில வர்த்தக அணிச் செயலாளரும் – ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும் – தமிழ்நாடு சிறுதொழில் வாரிய முன்னாள் தலைவருமான சிந்து ரவிச்சந்திரன்,

2.ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் கே.ஆர்.கந்தசாமி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்),

3.ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி ஆகியோர் தலைமையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பேரவை, பாசறை நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

4. அ.தி.மு.க.வைச் சேர்ந்த தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.விஜயலட்சுமி,

5.சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளரும், சத்தி வேளாண்மை – விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவருமான வி.சி.வரதராஜ்,

6.கோபிசெட்டிபாளையம் நகரச் செயலாளரும், கோபி வேளாண்மை – விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவருமான பி.கே.காளியப்பன் –

7.ஈரோடு புறநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளரும், பவானி நகர்மன்ற முன்னாள் தலைவருமான எம்.ஆர்.துரை –

8.ஈரோடு புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர்.செந்தில்குமரன் –

9.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளருமான பி.முத்துலட்சுமி –

10.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், பவானிசாகர் ஒன்றிய துணைச் செயலாளருமான எம்.தங்கராஜ் –

11.ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மோகனசுந்தரம் –

12.ஈரோடு புறநகர் மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் புலவர் வாசு தண்டபாணி –

13.ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளர் மார்டன் பி.மகேஷ்வரன்

14.ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.எம்ஆர்.ரவி,

15.தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் கே.டி.செந்தில்குமார்,

16.கோபிசெட்டிபாளையம் நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் பி.குணசேகரன் –

17.சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் என்.பி.ரகு –

18. சத்தியமங்கலம் ஒன்றிய இளைஞர் – இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.சஞ்சீவ்குமார் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் – உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

Leave a Response