இரண்டு வாரங்களில் கொரோனா குறையும் – சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி

சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் கேவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இது வரை எந்த பக்க விளைவுகளும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என கூறினார்.

அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு முகக்கவசம் அணிந்து அரசு விதிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும்.தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மீண்டும் ஊரடங்கு போடப்பட்டால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளது குறித்துக் கேட்டபோது, தமிழகத்தில் முழு ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது. அது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Response