தாராபுரம் நாம்தமிழர் வேட்பாளர் பற்றி காதுகூசும் கெட்டவார்த்தைகள் – விஜய் கட்சியினர் அட்டகாசம்

தாராபுரம்,மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதற்கான பரப்புரை நேற்று நிறைவடைந்தது.இறுதி பரப்புரை நாளான நேற்று,தாராபுரம் தவெக வேட்​பாளர்
சத்​ய​பா​மாவை ஆதரித்​து முதல்​வர் விஜய் நேற்று வாகன பரப்புரையில் ஈடு​பட்​டார்.

வீராச்சிமங்​கலம் என்ற பகு​தி​யில் முதல்​வர் செல்​வதற்கு சற்று நேரத்​துக்கு முன்​பாக, நாம் தமிழர் கட்​சி​யின் வேட்​பாளர் கார்த்​திகா தொண்​டர்​களுடன் வாகனப் பேரணி​யாக வந்​தனர்.முதல்​வர் வரு​கைக்​காக அங்கு நின்​றிருந்த காவல்துறையினர் அவர்​களை மாற்று வழி​யில் செல்​லு​மாறு அறி​வுறுத்​தினர்.

அப்​போது நாதக​வினர்,முன்பே அனுமதி பெற்று பரப்புரை செய்கிறோம் எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? என்று காவல்துறையினருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.அதனால்,நாதக வேட்​பாளர் உட்பட தொண்​டர்​கள் 100 பேரை கைது செய்து ஊதி​யூர் பகு​தி​யில் உள்ள தனி​யார் திருமண மண்​டபத்​தில் தங்க வைத்​தனர்.

விஜய் பரப்புரை செய்யும்போது நாங்கள் பரப்புரை செய்யக்கூடாதா? என்கிற கேள்வியை கார்த்திகா எழுப்பினார்.

அதோடு,இருநாட்களுக்கு முன்பு,தேர்தல் அலுவலரிடம், தவெகவினர் வாக்குக்குப் பணம் கொடுப்பதை சான்றுகளுடன் புகாராக அளித்தார்.

இவ்வாறு,அவர் தொடர்ந்து தவெகவினர் செய்யும் தப்புகளை அம்பலப்படுத்தி வந்ததால்,அவர் மீது கடுங்கோபம் கொண்டிருக்கிறார்கள் தவெகவினர்.

அக்கட்சியின் சார்பில் விர்ச்சுவல் வாரியர்ஸ் எனும் பெயரில் சமூகவலைதளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்போர் கார்த்திகா குறித்து காதுகூசும் அளவுக்கு வசைமாறி பொழிகிறார்கள்.

பெண்களைத் தவறாகப் பேசினால் சும்மாவிடமாட்டேன் என்று வீராவேசமாகப் பேசும் முதல்வர் விஜய்,அவருடைய இரசிகர்கள் கார்த்திகாவை மிக மோசமாகப் பேசிக்கொண்டிருப்பதை அறியவில்லையா? அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Response