மகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள மிரா பயந்தரில் செல்வாக்குப் பெற்ற பா.ஜனதா தலைவராக இருந்தவர் கீதா ஜெயின்.இவருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மிரா பயந்தர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் தனது ஆதரவை பா.ஜனதாவுக்கு தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் கீதா ஜெயின் நேற்று பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.

அவருடன் தானே மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தானே சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சார்னிக் ஆகியோர் இருந்தனர்.

சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.

இந்தநிலையில் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் அந்தக் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்து உள்ளார்.

இந்நிகழ்வுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Leave a Response