மோடியின் திடீர் முடிவு – மக்கள் எதிர்ப்பு

பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து பிரதமர் மோடி, தனது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். பிரதமரை சமூக வலைதளங்களில் இலட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி (மார்ச் 2,2020 இரவு) தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யோசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை முகநூலில் 44.72 மில்லியன் பேரும், ட்விட்டரில், 53.3 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில், 35.2 மில்லியன் பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில்தான் இவற்றிலிருந்து விலகப் போவதாகச் சொல்லியிருக்கிறார். பிரதமரின் இந்தப் பதிவுக்கு, சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டாம் என்பதை வலியுறுத்தும் விதமாக, “நோ சார்” என்ற குறிசிசொல்லை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.

“நோ சார்” ஹாஷ்டேக் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response