இபிஎஸ் ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக கமல் ரஜினி – மோடியின் புதிய திட்டம்

கூட்டத்தில் ஒருவன் பட இயக்குநர் த.செ.ஞானவேலின் பதிவிலிருந்து….

ரஜினி சார், தமிழகத்தில் பல அற்புதங்கள் நிகழ காரணம் மக்கள் அல்ல. மத்தியில் ஆளும் மோடி ஆண்டவர்.

எடப்பாடி முதல்வர் ஆனது, இரண்டு மாசத்துல கவிழ வேண்டி ஆட்சி, கவிழாமல் தொடர்ந்து வெற்றிநடை போடுவது போன்ற அற்புதங்களுக்கு சொந்தக்காரர் ஆண்டவர் மட்டுமே.

முதல்வரும், துணை முதல்வரும் இரட்டைகுழல் துப்பாக்கியைப் போல நீட் தேர்வு, இதுக்கீடு பறிப்பு, விவசாய நிலங்களை காவுகொடுப்பது, ஸ்டெரெலைட் போராட்டத்தில் அப்பாவி மக்களைக் கொல்வது என பல அற்புதங்கள் தமிழகத்தில் நிகழ எடப்பாடி மட்டுமா காரணம்?

அந்த அற்புதத்தை நிகழ்த்துகிற ஆண்டவரின் மகிமையை மறைக்கலாமா? சசிகலாவை உள்ளே அனுப்பியது, தர்மயுத்தம் நடத்தியவர்களைக் கைலுக்க வைத்தது, எம்.ல்.ஏ. வழக்குகளை தாமதப்படுத்தியது, நீதியை எடப்பாடி மாதிரியே குனிய வைத்து, தவழ வைத்து நீதியை நிலைநாட்டி அற்புதங்கள் நிகழத்திய அந்த ஆண்டவரின் பெருமையை பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல் போவது அநியாயம் ரஜினி சார்.

மோடி ஆண்டவரின் அற்புதத்தை திட்டமிட்டு மறைத்து கைக்கட்டி வாய்ப்பொத்தி வேடிக்கைப் பார்க்கிற தமிழர்களுக்கு கிரெடிட் கொடுப்பது வரலாற்று அநியாயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பின்னுக்கு இழுத்த அந்தப் பழைய துருப்பிடித்த இரட்டை குழல் துப்பாக்கிகளை தூக்கிவிட்டு, ரஜினி-கமல் என்கிற புதிய இரட்டைகுழல் துப்பாக்கியை துடைத்து 2021 தேர்தலுக்காக தயார்படுத்துகிற ஆண்டவரின் மகிமையைப் போற்றுவோம்.

இன்னும் பல அற்புதங்கள் நிகழ்த்துவார் என்று நம்புவோம்.

பொருளாதார நெருக்கடி, காஷ்மீர் அராஜகம், இராமர் கோயில் தீர்ப்பு என்று ஆண்டவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிகழ்த்தும் அற்புதங்களின் பட்டியல் நீளும். ஆண்டவரின் ராஜ்ஜியத்தில் இன்னும் பல உய்யலாலாக்களை நிகழும்.

அற்புதம் நிகழ்த்தியது தமிழக மக்கள் அல்ல, ஆண்டவர் என்பதை சூப்பர் ஸ்டாருக்கு யாரேனு எடுத்து சொல்லுங்கள்.. ப்ளீஸ்.. ஆண்டவருக்கு தோத்திரம்..

இவ்வாறு அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.

Leave a Response