காஷ்மீர் சிக்கல் – பழ.நெடுமாறன் அறிக்கை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்……

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370 – வது அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதாக இந்திய அரசு செய்துள்ள முடிவு காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்டும் நம்பிக்கை துரோகமாகும்.

பாகிஸ்தான் கூறிய வாக்குறுதிகளை ஏற்காமல் இந்தியாவுடன் இணைவது என காஷ்மீர் மக்கள் முடிவு செய்த போது அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டது.

இந்திய அரசின் ஆளும் கட்சிகள் மாறலாம்.ஆனால் அரசு அளித்த வாக்குறுதி நிலையானது அதை மீறுவது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

காஷ்மீர் மக்களுக்கு நேர்ந்த நிலை நாளை தமிழ்நாட்டிற்கும் பிற மாநிலங்களுக்கும் நேரலாம்.எனவே இந்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response