கமல் சர்ச்சைப் பேச்சு குறித்த ரஜினியின் எதிர்வினை

அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையின் போது கமல் பேசுகையில்,

அந்தக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு எனப் போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு எனப் போராட வேண்டிய சூழல் வந்துவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்த கொலைக்குக் கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக மூவர்ணக்கொடியில் அந்த மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன் என்று கூறினார்.

கமலின் இப்பேச்சுக்கு பாஜக அதிமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு ஹெரிவ்த்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து,செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியை ரஜினிகாந்த் தவிர்த்துள்ளார்.

மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நேற்று இரவு ரஜினி சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் தர்பார் படப்பிடிப்பு எப்படி? என்றனர்.அதற்கு, ‘நல்லா நடந்தது’, என்றார்.

சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான் என்று கமல்ஹாசன் பேசியுள்ளாரே அது பற்றி உங்கள் கருத்து? என்ன எனக் கேட்டதற்கு அதைப்பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டு வேறு எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

Leave a Response