பாலியல் கொடூரம் – உச்சநீதிமன்றம் செல்லும் சீமான்

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான காணொலி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நாம்தமிழர்கட்சியின் பண்பாட்டு அமைப்பான வீரத்தமிழர் முன்னணி சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யவிருக்கிறார்களாம்.

இது தொடர்பான பதிவில்,

பெண் பிள்ளையைப் பெற்ற தகப்பனாக அந்த கொடுந்துயரை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது.

பொள்ளாச்சி கூட்டுபாலியல் கொடுமையை எதிர்த்து, நீதி கோரி ஆதரங்களுடன் வீரத்தமிழர் முன்னணி உச்சநீதிமன்றத்தில் வழக்கை நாளை பதிவு செய்கிறது.

அண்ணனின் (சீமான்) வழிகாட்டுதலோடு

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response