கொடுப்பதைக் கொடுங்கள் அதிமுகவிடம் கேட்டுப் பெற்ற தேமுதிக

2019 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பலத்த சர்ச்சைகளுக்குப் பிறகு தேமுதிக இடம் பெற்றுள்ளது.

தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் ஆகியோர் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், 21 சட்டசபை தொகுதியில் தேமுதிக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

நாளை நமதே, நாற்பதும் நமதே எனும் வகையில் இந்த கூட்டணி வெற்றி பெறும்.உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும், அதன் பிறகும் கூட்டணி தொடரும் என்று பிரேமலதா கூறினார்.

தொடக்கத்தில் அதிக தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தலில் சில தொகுதிகள் என்று கேட்டுக்கொண்டிருந்த தேமுதிக, கடைசியில் அதிமுக எதைக் கொடுக்கிறதோ அதைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

Leave a Response