ஸ்டாலினை எதிர்த்த பாஜக, திருப்பி அடித்த திமுக

இலண்டன் சென்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதையொட்டி,
அதிமுக, பா.ஜ.க மற்றும் ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். #GoBackStalin (திரும்பி போ ஸ்டாலின்) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் எதிர்ப்பௌ தெரிவித்தனர். அது டிரெண்டில் இடம் பிடித்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் சென்னை வந்தபோது, அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்தன.

அவர்களைத் திரும்பிப் போகச் சொல்லும் வகையில் #GoBackModi #GoBackAmitSha ஆகிய ஹேஷ்டேக்குடன் இணையதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது ஸ்டாலினுக்கு எதிராக அதே போன்றதொரு நடவடிக்கையை பாஜக எடுத்தது. சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட திமுகவினர்,இதற்கு எதிராக, #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்குடன் ஸ்டாலினை வரவேற்றும் வாழ்த்தியும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இதுவும் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இதனால் ஸ்டாலினுக்கான எதிர்ப்பு பின்னால் சென்றுவிட்டது. #GoBackStalin #WelcomeStalin

Leave a Response