100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 64-வது முறையாக நீர் 100 அடியை எட்டியுள்ளது.

கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டால், அணை முழு கொள்ளலவை எட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response