கமலுக்கு எழுத்தாளர் ரவிக்குமார் எழுதியுள்ள பகிரங்கக் கடிதம்

பிப்ரவரி 21, 2018 அன்று அரசியல்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அந்நாள் உலக தாய்மொழிகள் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதையொட்டி, எழுத்தாளர் ரவிக்குமார் கமலுக்கு எழுதியுள்ள பகிரஙகக் கடிதம்….

கமல்ஹாசன் அவர்களின் கவனத்துக்கு

நீங்கள் கட்சி துவக்கவுள்ள பிப் 21 – உலக தாய்மொழி நாளாகும். ‘நீடித்த வளர்ச்சிக்கு மொழி பன்மைத்துவம், பன்மொழி ஆளுமை ‘ என்பதை இந்த ஆண்டின் தாய்மொழி நாளுக்கான மையக் கருத்தாக ஐநா சபை அறிவித்துள்ளது.

அடிப்படைக் கல்வியை குழந்தைகள் தாய்மொழியில் பயில்வதே அவசியம் என ஐநா கூறியுள்ளது. உள்ளூர் மொழியின் வளர்ச்சியே நீடித்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் எனத் தெரிவித்துள்ளது.

இனி ஒவ்வொரு ஆண்டும் கட்சி துவக்கிய ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதற்கு பதிலாக
தாய்மொழி நாளை கடைபிடிக்குமாறு உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் கூறுவீர்களா ? அந்த நாளில் தமிழ்க் கல்வியின் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் எடுத்துக்கூற நீங்கள் முன்வருவீர்களா?

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response