விக்ரம் மகனை அறிமுகப்படுத்தும் பாலா..!


ஹீரோக்களின் வாரிசுகளும் ஹீரோக்களாக களம் இறங்கி வருவது தொன்றுதொட்டு நடந்துவரும் நிகழ்வு தான். திறமையும் அதிர்ஷ்டமும் உள்ளவர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்துக்கொள்கிறார்கள். அந்தவகையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக களத்தில் குதித்துள்ளார்..

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்களே அதுபோல துருவ் அறிமுகமாகும் படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரம் சினிமாவில் அறிமுகமாகி சாதாரண ஒரு ஹீரோவாகவே சில வருடங்களை கடத்திய நிலையில், பாலாவின் ‘சேது’ மூலம் தான் ஒரு புது அவதாரம் எடுத்தார்.

அதுதான் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. இப்போது தனது மகனையும் பாலா இயக்கத்தில் அறிமுகப்படுத்துவது விக்ரம் எடுத்துள்ள மிகச்சரியான முடிவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Leave a Response