கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘சந்திரமௌலி’..!


கௌதம் கார்த்திக் முதன்முதலாக அவரது தந்தையுடன் இணைந்து நடிக்கிறார்.. இந்தப்படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனரான திரு இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக வரலட்சுமி, ரெஜினா இருவரும் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் டைட்டிலை இன்று சிவகார்த்திகேயன் அறிவிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இந்தப்படத்திற்கு சந்திரமௌலி என சிவகார்த்திகேயன் மூலமாக டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பியூட்டி என்றால் நவரச நாயகன் கார்த்திக் மவுனராகம் படத்தில் பேசிய புகழ்பெற்ற காமெடி வசனம், இல்லையில்லை வார்த்தை தான் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. அதையே அவரது மகன் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளது மிகப்பொருத்தமான விஷயம்.

Leave a Response