கௌதம் கார்த்திக்கின் புதிய படம் நவ-29ல் துவக்கம்..!


கார்த்திக் நடிப்பில் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்கியுள்ள ‘இந்திரஜித்’ படம் வரும் நவ-24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தனது தந்தை கார்த்திக்குடன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் இம்மாதம் 29ம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

திரு இயக்கத்தில் நடிகர்கள் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் அகத்தியன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் காமெடியனாக சதீஷ் நடிக்கவுள்ளார்..

Leave a Response