கமல் கர்நாடகமுதல்வர் சந்திப்பு இராமதாசு எதிர்ப்பு

கர்நாடக-தமிழக ஒற்றுமைக்கும், காவிரி பற்றியும் எனது பேச்சு இருக்கும். அதையும் விட சில பேச்சுவார்த்தை கர்நாடக முதல்-மந்திரியுடன் பேச வேண்டியது இருக்கிறது. அதற்காகத்தான் பெங்களூரு செல்கிறேன். ஆனால் கண்டிப்பாக சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேச மாட்டேன்.

காவிரி தண்ணீரை விட வலியுறுத்தும் பலம் என்னிடம் இல்லை. நான் மக்களின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்து சொல்ல முடியும். அவர் கூறும் கருத்துகளை இங்கு வந்து சொல்ல முடியும். காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. அந்த கருத்தின் அடிப்படையில்தான் என்னுடைய பயணத்தை நோக்கி செல்கிறேன் என்று சொல்லிவிட்டு பெங்களூரு சென்ற நடிகர் கமல், இன்று கர்நாடக முதல்வரைச் சந்தித்தார்.

காவிரி தொடர்பாக சந்திப்பதாக கமல் சொன்னதற்கு பாமக நிறுவனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சரை கமலஹாசன் இன்று சந்தித்து காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்துகிறார்: செய்தி – காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும்!

இவ்வாறு அவர் கூறுயுள்ளார்.

Leave a Response