காலாவுக்கு எதிராக களமிறங்கிய ராமதாஸ் – வடமாவட்டங்களில் பரபரப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், மணிகண்டன், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வருகிற 7-ம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.

படம் வெளியாக இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், கூடுதல் விலைக்கு ‘காலா’ டிக்கெட் விற்கப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஜோரா கைதட்டுங்க… ‘காலா’ திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் 165.78 ரூபாய்க்குப் பதிலாக, 207.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால், ‘காலா’ திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்… ஏழைப் பங்காளன்”

இவ்வாறு தெரிவித்துள்ளார் மருத்துவர் ராம்தாஸ்.

மருத்துவர் ராமதாஸ் காலாவுக்கெதிராக கருத்து சொல்லியிருப்பதால் வடமாவட்டங்களில் காலாவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் சிக்கலைச் சந்திக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்தப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response