
வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
முதல்வர் விஜய் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் முழுமையாகக் கேட்டுவிட்டு,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசவேண்டும்.சட்டப்பேரவையை விட்டு வெளியேபோய் கருத்து சொல்லாமல்,உள்ளே இருந்து கருத்து சொன்னால் அதற்கான பதில் எதிர்க்கட்சித் தலைவருக்குக் கிடைத்திருக்கும்.
திமுக கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால்தான்,மக்கள் நிராகரித்துள்ளனர்.முதல்வர் விஜய்
பிறந்தநாளன்று பள்ளி மாணவர்கள் கட்சிக்கொடி ஏந்தியதற்கு நாங்கள் பொறுப்பல்ல.சட்டப்பேரவைக்குள் 2 முறை தேசியகீதம் இசைக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பாஜக தலைவர்களை நாடியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவை தவெக என்றைக்கும் கேட்கவில்லை.நயினார் நாகேந்திரன் காமெடியாக பேசிக்கொண்டிருக்கிறார். நாங்கள் தவறு செய்யமாட்டோம்,தவறு செய்யவிடமாட்டோம் என முதல்வர் சொல்லி உள்ளார்.
எனவே,கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை,கொள்ளை உள்பட அனைத்து விவகாரங்களிலும்
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொடநாடு வழக்கை தீர விசாரித்தால் அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆபத்து என்று பலரும் சொல்லிகொண்டிருக்கிற நேரத்தில் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்திருப்பது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


