
தமிழில் மட்டுமல்லாமல் மலையாள திரையுலகிலும் நடிகர் பசுபதிக்கு நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது. இதுவரை மலையாளத்தில் ஆறேழு படங்களில் நடித்துவிட்டார் பசுபதி. கடந்த வருடம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் டைரக்சனில் வெளியான ‘ஊழம்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் நடிகர் பசுபதி..
தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைவாக உள்ள இந்த சமயத்தில் மீண்டும் ஒரு மலையாளப்பட வாய்ப்பு பசுபதியை தேடிவந்துள்ளது. நான்கு வருடங்களுக்கு முன் ‘நம்பர் 66 மதுரா பஸ்’ படத்தில் பசுபதியை கதாநாயகனாக நடிக்க வைத்த எம்.ஏ.நிஷாத் என்பவர்தான் இந்தப்படத்தில் பசுபதிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.


