கருப்பன் – விமர்சனம்

கருப்பன் வழக்கம்போல கிராமத்து ஹீரோ, தண்ணி அடிச்சிட்டு, வழக்கம்போல ஒரு தாய்மாமன் அவர்கூட சேர்ந்து சரக்கடிச்சிட்டு,ஊர்வம்பு இழுத்துட்டு, தப்புன்னு தெரிஞ்சா எவனா இருந்தாலும் அடிச்சிட்டு, நியாயத்துக்காக ஊர்ல இருக்கிற பெரிய மனுசனெயெல்லாம் பகைச்சிட்டு, அவன் நல்ல மனசு தெரியாம ஊரே அவனுக்கு எதிரியா நிற்கும்போதும் கலங்காம , தன்னை நம்பி வந்தவதான் முக்கியம் அவளுக்குதான் எல்லாம் அவன் உயிரும் சொல்லிட்டு திரியுற….

நிறுத்துங்க , நிறுத்துங்க , இது கொம்பன்,குட்டிப்புலி,முரட்டுகாளை கதைன்னு நீங்க சொன்னா அது உங்க இஷ்டம், சத்தியமா இதுதான் கருப்பன் கதையும்.

போலிஸ், பொறுக்கி, ரவுடி, அரசியல்வாதி எல்லா கேரக்டருக்கும் தன்னை மாத்திக்கிற ஒரு சில ஹீரோக்கள் இருப்பாங்க, ஒரு சிலர் அந்த கேரக்டரை தனக்கானதா மாத்திக்குவாங்கா அதுதான் விஜய்சேதுபதி.

ஒரேஆறுதல் அழகு ஹீரோயின் தன்யா தான், அழகு வரவு நிஜமாகவே.

வழக்கமான பாசமலர் அண்ணன் பசுபதி, வழக்கம்போல முறைமாமன் வில்லன் பாபிசிம்ஹா (நமக்குலாம் எதுக்கு தலைவா இந்த கேரக்டர் எல்லாம், ஜீனியர் ஆர்டிஸ்ட் யாராவது போட்டுருக்கலாமே), வழக்கமான ஊர் பெருசு, அதே இமான் இசை .. எல்லாம் வழக்கமான ஒன்னுதான் அதுதான் படமும் வழக்கமான ஒன்னா போயிடுது.

படத்துல ஒரு சீன் கூட புதுசு இல்லை, ஏன் பக்கத்துல இருக்கிற 50 வயசு அங்கிள்ல இருந்து 10 வயசு பையன் வரை அடுத்த சீன் இதுதான் சொல்லி கலாய்ச்சிட்டு இருந்தாங்க.

அதுனால கருப்ப……ன்,
அரைச்ச மாவை அரைச்சா என்னவாகும் ஊரறியும்.

-சுரேஷ்

Leave a Response