ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘பிருந்தாவனம்’ படம் வரும் 26ஆம் தேதி ரிலீசாகிறது. இந்தப்படத்தில் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா கதாநாயாகியாக நடிக்க, விவேக் காமெடி குணச்சித்திரம் இரண்டும் கலந்த முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்தப்படத்தில் நடிகர் விவேக் ஆகவே வருகிறார் விவேக்..
பார்பர் தொழில் செய்யும் வாய் பேசமுடியாத அருள்நிதி, விவேக்கின் காமேடிகளால் ஈர்க்கப்பட்டு அவரை ஆதர்ச ஹீஎரோவாகவே மனதில் நினைப்பாராம். பின்னொரு நாளில் விவேகி அவர் எதிர்பாராமல் சந்திக்க, அதன்பின் அவரது வாழக்கையில் ந்கிழும் மாற்றங்கள் தான் பிருந்தாவனம் படத்தின் முழுக்கத்தை.. ஆக படம் முழுக்க விவேக் வருவதால் அவரும் படத்தின் இன்னொரு ஹீரோ போலத்தான் என்கிறார் இயக்குனர் ராதாமோகன்.