‘கவண்’ மூலம் விஜய்சேதுபதியின் புதிய சாதனை..!


இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே ‘கவண்’ படம்தான் அதிக வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் ‘கவண்’. இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படம் திரைக்கு வந்தும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. சென்னையில் மட்டுமே ரூ 2.8 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ‘கவண்’ ரூ 20 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இதன்மூலம் விஜய் சேதுபதி புதிய சாதனை படைத்துள்தாக கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படம்தான் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ‘கவண்’ படம் முயறிடித்துள்ளது.

Leave a Response