‘எனை நோக்கி பாயும் தோட்டா’வுக்கு ரிலீஸ் தேதி கிடைத்தது..!


பொதுவாகவே கௌதம் மேனன் இயக்கும் படங்கள் எப்போது ரிலீஸாகும் என அவருக்கும் தெரியாது.. பணம் போட்ட தயாரிப்பாளருக்கும் தெரியாது.. அந்த அளவுக்கு புறச்சிக்கல்கள் சுற்றி சூழ்ந்து தாக்கும்.. தற்போது அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது சில பிரச்னைகளால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடனே விக்ரம் நடிப்பில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்தில் கவனம் செலுத்த துவங்கினார் கௌதம் மேனன்.

இந்நிலையில் தற்போது அப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. ப.பாண்டி படத்தை வாங்கியுள்ள கே பிலிம்ஸ் ராஜராஜன், இந்தப்படத்தின் உரிமையையும் வாங்கியுள்ளார். ஆகையால், விரைவில் தனுஷுக்கு அளிக்க வேண்டிய பணத்தை கொடுத்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை முடித்து ஜூன் 23ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Leave a Response