‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு..!


8 தோட்டாக்கள்’ திரைப்படத்தை, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் புதுமுகம் வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் இந்தப்படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர்.

படம் பார்த்த பலரும் துருவங்கள் பதினாறு போல இந்தப்படமும் விறுவிறுப்பாக இருக்கிறது என பாராட்டியுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு வெளியான துருவங்கள் பதினாறு, நேற்று 100வது நாளை கொண்டாடியது. இன்று வெளியாகும் 8 தோட்டாக்கள்’ படமும் துருவங்கள் பதினாறு லெவலுக்கு வெற்றிப் பெறும் என்கிறார்கள் படம் பார்த்த பெரும்பாலனவர்கள்..

Leave a Response