‘காற்று வெளியிடை படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு..!


பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கார்த்தி, அதிதிராவ் ஹைதாரி நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது தற்போது இந்த படத்திற்கு தமிழக அரசின் 30 சதவிகித வரிவிலக்கு கிடைத்துள்ளது.

இந்த தகவல் மணிரத்னம் உள்பட படக்குழுவினர்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசாக கருதப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை இந்த படம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response