
மீண்டும் ஒரு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.. தமிழில் நாயகனாக அறிமுகமான ‘டார்லிங்’ படமே தெலுங்கில் வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்திரம்’ படத்தின் ரீமேக் தான். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ப்ரூஸ் லீ’ படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை..
இருந்தாலும் ஜி.வி.பிரகாஷ் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தற்போது பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படம் உட்பட “அடங்காதே, ஐங்கரன், செம, குப்பத்து ராஜா, 4ஜி” உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘எக்கடிக்கி போத்தாவு சின்னவாடா’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கப் போகிறார். எழில் இப்படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.


