சூரியின் 40 நாள் நட்பு பேக்கேஜ் பற்றி தெரியுமா….?

 

சந்தானம் ஹீரோவானாலும் கூட தனக்கு காமெடி ஏரியாவே போதும் என்கிற உறுதியான முடிவில் வலம்வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூரி.. இந்த வருடத்தில் அவரது காமெடி படங்களில் ஹைலைட்டாக அமைந்து அவரை  இன்னும் உயரே தூக்கி விட்டது ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம்.

இதைத் தொடர்ந்து தலைவா நீங்களும் ஹீரோவாக நடிக்கலாமே.. உங்க காமெடிக்காகத்தானே அந்தப்படம் ஓடுது என ஒரு கூட்டம் துதிபாட, இவர்களைப் போல ஆட்களால் தான் நமக்கு டேஞ்சர் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு எல்லாம் பேட்டா கொடுத்து பஸ் ஏற்றிவிட்டராம் சூரி.

ஆக காமெடியனாக எந்தவித சிக்கலும் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது சூரியின் சினிமா வாழ்க்கை.
என் படத்தில் சூரிதான் என்றும் என கேட்கும் அவரது நட்பு வட்டம் பெருகிக்கொண்டே போகிறது.. சிவகார்த்திகேயன், விஷால், சுசீந்திரன், எழில் போன்ற சில நண்பர்களின் படங்களில் நடிக்க திடீரென அழைப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என அவர்களுக்காகவே 40 நாட்களை பரவலாக பிரித்து கைவசம் வைத்திருக்கிறாராம் சூரி.. இதனால் நட்பு கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது சூரியின் கணக்கு

 

 

Leave a Response